சொற்பொருள்
| திண்மை | - | வலிமை |
| ஆழி | - | கடல் |
| இருநிலம் | - | பெரிய நிலம் |
| இசைபட | - | புகழுடன் |
| கயவர் | - | கீழ்க்குணமுடையோர் |
| உறுதி | - | உளஉறுதி |
| சொருபம் | - | வடிவம் |
| தரணி | - | உலகம் |
| தாரம் | - | மனைவி |
| வையை நாடவன் | - | பாண்டியன் |
| உய்ய | - | பிழைக்க |
| இறந்து | - | பணிந்து |
| தென்னவன் குலதெய்வம் | - | சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன் |
| இறைஞ்சி | - | பணிந்து |
| சிரம் | - | தலை |
| மீனவன் | - | மீன் கொடியை உடைய பாண்டியன் |
| விபுதர் | - | புலவர் |
| தூங்கிய | - | தொங்கிய |
| பொற்கிழி | - | பொன்முடிப்பு |
| நம்பி | - | தருமி |
| பைபுள் | - | வருத்தம் |
| பனவன் | - | அந்தணன் |
| கண்டம் | - | கழுத்து |
| வழுவு | - | குற்றம் |
| சீரணி | - | புகழ் வாய்ந்த |
| வேணி | - | செஞ்சடை |
| ஓரான் | - | உணரான் |
| குழல் | - | கூந்தல் |
| ஞானப்பூங்கோதை | - | உமையம்மை |
| கற்றைவார் சடையன் | - | சிவபெருமான் |
| உம்பரார் பத்தி | - | இந்திரன் |
| நுதல் | - | நெற்றி |
| ஆய்ந்த நாவலன் | - | நக்கீரன் |
| காய்ந்த நாவலன் | - | இறைவன் |
| மெய் | - | உடல் |
| விதிவிதிர்த்து | - | உடல் சிலிர்த்து |
| விரை | - | மணம் |
| நெகிழ | - | தளர |
| ததும்பி | - | பெருகி |
| கழல் | - | ஆண்கள் காலில் அணியும் அணிகலன் |
| சயசய | - | வெல்க வெல்க |
| விழுப்பம் | - | சிறப்பு |
| ஓம்பப்படும் | - | காத்தல் வேண்டும் |
| பரிந்து | - | விரும்பி |
| தேரினும் | - | ஆராய்ந்து பார்த்தாலும் |
| குடிமை | - | உயர்குடி |
| இழுக்கம் | - | ஒழுக்கம் இல்லாதவர் |
| அழுக்காறு | - | பொறாமை |
| ஆகம் | - | செல்வம் |
| ஏதம் | - | குற்றம் |
| எய்துவர் | - | அடைவர் |
| இடும்பை | - | துன்பம் |
| வித்து | - | விதை |
| ஒல்லாவே | - | இயலாவே |
| ஓட்ட | - | பொருந்த |
| ஒழுகல் | - | நடத்தல் |
| கூகை | - | கோட்டான் |
| இகல் | - | பகை |
| தீராமை | - | நீங்காமை |
| பொருதகர் | - | ஆட்டுக்கடா |
| சேருவர் | - | பகைவர் |
| சுமக்க | - | பனிக |
| கிழக்காந்தலை | - | தலைகீழ்(மாற்றம்) |
| எய்தற்கு | - | கிடைத்தற்கு |
| கூம்பும் | - | வாய்ப்பற்ற |
| வணங்கி | - | பணிந்து |
| மாண்டார் | - | மாண்புடைய சான்றோர் |
| நுணங்கிய நூல் | - | நுண்ணறிவு நூல்கள் |
| நோக்கி | - | ஆராய்ந்து |
| கொற்கை | - | பாண்டிய நாட்டின் துறைமுகம் |
| தென்னம் பொருப்பு | - | தென்பகுதியில் உள்ள பொதிகைமலை |
| பலியோடு படரா | - | மறநெறியில் செல்லாத |
| பசுந்துணி | - | பசிய துண்டம் |
| தடக்கை | - | நீண்ட கைகள் |
| அறுவற்கு இளைய நங்கை | - | பிடாரி |
| கானகம் | - | காடு |
| உகந்த | - | விரும்பிய |
| தாருகன் | - | அரக்கன் |
| செற்றம் | - | கறுவு |
| தேரா | - | ஆராயாத |
| புள் | - | பறவை |
| புன்கண் | - | துன்பம் |
| ஆழி | - | தேர்ச்சக்கரம் |
| படரா | - | செல்லாத |
| வாய்முதல் | - | உதடு |
| தெளிவுறுத்தும் | - | விளக்கமாய் காட்டும் |
| சுவடி | - | நூல் |
| எளிமை | - | வறுமை |
| நாணிடவும் | - | வெட்கப்படவும் |
| தகத்தகாய | - | ஒளிமிகுந்த |
| சாய்க்காமை | - | அழிக்காமை |
| தாபிப்போம் | - | நிலைநிறுத்துவோம் |
| ஆயகாலை | - | அந்த நேரத்தில் |
| அம்பி | - | படகு |
| நாயகன் | - | தலைவன் |
| நாமம் | - | பெயர் |
| கல் | - | மலை |
| திரள் | - | திரட்சி |
| துடி | - | பறை |
| அல் | - | இருள் |
| சிருங்கிபேரம் | - | கங்கைகரையோர நகரம் |
| திரை | - | அலை |
| மருங்கு | - | பக்கம் |
| நாவாய் | - | படகு |
| நெடியவன் | - | இராமன் |
| இறை | - | தலைவன் |
| பண்ணவன் | - | இலக்குவன் |
| பரிவு | - | இரக்கம் |
| குஞ்சி | - | தலைமுடி |
| மேனி | - | உடல் |
| மாதவர் | - | முனிவர் |
| முறுவல் | - | புன்னகை |
| விளம்பல் | - | கூறுதல் |
| கார்குலாம் | - | மேகக்கூட்டம் |
| பார்குலாம் | - | உலகம் முழுவதும் |
| குரிசில் | - | தலைவன் |
| இருத்தி | - | இருப்பாயாக |
| நயனம் | - | நயனம் |
| இந்து | - | நிலவு |
| நுதல் | - | நெற்றி |
| கடிது | - | விரைவாக |
| முரிதிரை | - | மடங்கிவிழும் அலை |
| அமலன் | - | குற்றமற்றவன் |
| இளவல் | - | தம்பி |
| அரி | - | நெற்கதிர் |
| சேறு | - | வயல் |
| யாணர் | - | புதுவருவாய் |
| வட்டி | - | பனையோலைப் பெட்டி |
| நெடிய மொழிதல் | - | அரசரிடம் சிறப்புப் பெறுதல் |
| துகிர் | - | பவளம் |
பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]