சொற்பொருள்
| என்பால் | - | என்னிடம் |
| தார்வேந்தன் | - | மாலையணிந்த அரசன் |
| கோல்நோக்கி | - | செங்கோல் செய்யும் அரசனை நோக்கி |
| செத்தை | - | குப்பைகூளம் |
| இளைப்பாறுதல் | - | ஓய்வெடுத்தல் |
| ஆரமிர்தே | - | அரிய அமிழ்தே |
| பூரணமாய் | - | முழுமையாய் |
| புனிதம் | - | தூய்மை |
| விழுப்பொருள் | - | மேலானப்பொருள் |
| வையம் | - | உலகம் |
| இரிந்திட | - | விலகிட |
| பைய | - | மெல்ல |
| தாள் | - | திருவடி |
| ஐயை | - | தாய் |
| மருவு | - | பொருந்திய |
| செய் | - | வயல் |
| மல்குதல் | - | நிறைதல் |
| இருநிலம் | - | பெரிய பூவுலகு |
| ஓங்குமலை | - | உயர்ந்த மலை |
| சிலம்பு | - | மலைச்சாரல் |
| வேங்கை பிடவு | - | மலைநிலத்தே வளரும் மரங்கள் |
| உகிர் | - | நகம் |
| உழுவை | - | ஆண்புலி |
| கவலை | - | கிளைவழி |
| சாஅய் | - | மெலிவுற்று |
| தோகை | - | மயில் |
| வதுவை | - | திருமணம் |
| அமரருள் | - | தேவர் உலகம் |
| ஆரிருள் | - | நரகம் |
| செறிவு | - | அடக்கம் |
| தோற்றம் | - | உயர்வு |
| பணிதல் | - | அடங்குதல் |
| எழுமை | - | ஏழு பிறப்பு |
| சோகாப்பர் | - | துன்புறுவர் |
| கதம் | - | சினம் |
| தாளாற்றி | - | மிக்க முயற்சி செய்து |
| வேளாண்மை | - | உதவி |
| இடம் | - | செல்வம் |
| திரு | - | செல்வம் |
| கடன் | - | முறைமை |
| கூகை | - | கோட்டான் |
| தகர் | - | ஆட்டுக்கிடாய் |
| செறுநர் | - | பகைவர் |
| மாற்றான் | - | பகைவர் |
| சாகாடு | - | வண்டி |
| உய்க்கும் | - | செலுத்தும் |
| காக்க | - | கடைப்பிடித்து ஒழுகுக |
| சீர்மை | - | விழுப்பம், சிறப்பு |
| மாண | - | மிகவும் |
| ஒருமை | - | ஒருபிறப்பு |
| ஏமாப்பு | - | பாதுகாப்பு |
| வடு | - | தழும்பு |
| செவ்வி | - | தகுந்த காலம் |
| தந்த | - | ஈட்டிய |
| புத்தேள் உலகம் | - | தேவர் உலகம் |
| அற்று | - | போலும் |
| ஒல்கார் | - | தளரார் |
| கேடு | - | பொருள்கேடு |
| இகல் | - | பகை |
| பொள்ளென | - | உடனடியாக |
| சுமக்க | - | பனிக |
| பீலி | - | மயில்தோகை |
| இரும் | - | முரியும் |
| சிலை | - | வில் |
| குரங்கின | - | வளைந்தன |
| கருங்கொடி | - | கரிய ஒழுங்கு |
| கொடி | - | ஒழுங்கு |
| எயிரு | - | பல் |
| எரிமலர் | - | முருக்கமலர் |
| இவுளி | - | குதிரை |
| நுனை | - | கூர்மை |
| பிணை | - | பெண்மான் |
| இழுக்கி | - | தப்பி |
| மொய்ம்பு | - | வலிமை |
| கணிகை | - | பொதுமகள் |
| குரங்கி | - | வளைந்து |
| நிலமடந்தை | - | பெற்ற தாய் |
| கைத்தாய் | - | செவிலித்தாய் |
| புரி | - | முறுக்கு |
| பொழில் | - | சோலை |
| பறவை | - | கின்னரமிதுனம் என்னும் பறவை |
| மிடறு | - | கழுத்து |
| கடி | - | விளக்கம் |
| விம்மாது | - | புடைக்காது |
| உளர | - | தடவ |
| கால் | - | காற்று |
| கடம் | - | காடு |
| மாழ்கி | - | மயங்கி |
| எழினி | - | உறை |
| மடங்கள் | - | சிங்கம் |
| கொல்லை | - | முல்லைநிலம் |
| தூமம் | - | அகிற்புகை |
| இருவிசும்பு | - | செவிலித்தாய் |
| ஓதி | - | சொல்லி |
| பத்தர் | - | யாழின் ஓர் உறுப்பு |
| கான் | - | காடு |
| சிரம் | - | தலை |
| வளை | - | புற்று |
| பிடவை | - | துணி |
| பொறி | - | புள்ளிகள் |
| பருவரல் | - | துன்பம் |
| கடி | - | மணம் |
| நறை | - | தேன் |
| கெந்தம் | - | பற்கள் |
| சென்னி | - | தலை |
| கோடிகம் | - | ஆடை |
| கான்று | - | உமிழ்ந்து |
| வரை | - | மலை |
| முரணி | - | மாறுபட்டு |
| நகம் | - | மலை |
| முழை | - | குகை |
| பாந்தள் | - | பாம்பு |
| வெருவி | - | அஞ்சி |
| உரகம், பணி | - | பாம்பு |
| நித்திரை | - | தூக்கம் |
| காந்தி | - | பேரொளி |
| பரல் | - | கல் |
| வேகம் | - | சினம் |
| மரைமலர் | - | தாமரை மலர் |
| கால் | - | காற்று |
| பன்னகம் | - | பாம்பு |
| புடை | - | வளை, பொந்து |
| புதியன் | - | இறைவன் |
| செந்தழல் | - | வேள்வியில் மூடுகிற நெருப்பு |
| வானோர் | - | தேவர்கள் |
| இந்தனம் | - | விறகு |
| உகம் | - | யுகம் |
| திருந்தலீர் | - | பகைவர்கள் |
| செயமாது | - | வெற்றித் திருமகள்(விசயலட்சுமி) |
| காயம் | - | உடம்பு |
| வாரி | - | கடல் |
| கோற்றொடியார் | - | பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்) |
பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]