சொற்பொருள்
| குக்குவென | - | நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு |
| பண்ணை | - | வயல்வெளி |
| வேய் | - | மூங்கில் |
| அரி | - | சிங்கம் |
| அவுணன் | - | இரணியன் |
| சேனை | - | சைனியம் |
| படி | - | உலகம் |
| பெண் | - | அகலிகை |
| நாரி | - | சீதாப்பிராட்டி |
| அரண் | - | சிவன் |
| காயம் | - | உடம்பு |
| பண்ணும் தொழில் | - | காத்தல் தொழில் |
| பாதவம் | - | மருத மரம் |
| பாரம் | - | பளு |
| வேலை | - | கடல் |
| வரை | - | மலை |
| மாசை | - | பழிப்பை |
| அரை | - | இடுப்பு |
| அமணர் | - | சமணர் |
| சிலை | - | வில் |
| மடி | - | இறந்த |
| கடகரி | - | மத யானை |
| அபயன் | - | முதல் குலோத்துங்கச்சோழன் |
| சேர | - | முற்றும் |
| ஆற்றி | - | உண்டாக்கி |
| கலிங்கம் | - | ஆடை |
| முந்நூல் | - | பூணூல் |
| அரிதனை | - | பகை |
| சயத்தம்பம் | - | வெற்றித்தூண் |
| வயமா | - | குதிரை |
| வண்டையார் கோன் | - | கருணாகரத் தொண்டைமான் |
| புலராமே | - | வறண்டு விடாமல் |
| விரல் | - | பெருவிரல் |
| அஞ்சனம் | - | கண்மை |
| தாள் | - | கால் |
| கம்முதல் | - | குரல் தேய்ந்து மங்குதல் |
| சிவவாமே | - | சிவக்காமல் |
| கலுழ்தல் | - | அழுதல் |
| வயித்தியநாதபுரி | - | புள்ளிருக்குவேளூர் |
| ஏகன் | - | இறைவன் |
| தற்பரன் | - | இறைவன் |
| அருந்தவம் | - | பண்புத்தொகை |
| உன்னதம் | - | வீரம் |
| இமமலை | - | இமயமலை |
| கீர்த்தி | - | புகழ் |
| பண் | - | பாடல் |
| ஈர்க்கின்ற | - | கவர்கின்ற |
| புலம் | - | அறிவு |
| புல்லடிமை | - | இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம் |
| தட்டின்றி | - | குறையின்றி |
| மூவாத | - | மூப்படையாத |
| மீன் | - | விண்மீன் |
| தளை | - | விலங்கு |
| வதிபவர் | - | வாழ்பவர் |
| மிடிமை | - | வறுமை |
| நமன் | - | எமன் |
| நடலை | - | இறப்பு |
| பிணி | - | நோய் |
| ஏமாப்பு | - | பாதுகாப்பு |
| ஆழி | - | கடல், சக்கரம் |
| சார்ங்கம் | - | வில் |
| பாழி | - | வலிமை |
| துசங்கட்டுதல் | - | விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு. |
| இருவினை | - | நல்வினை, தீவினை |
| பரவுதும் | - | யாம் தொழுதும் |
| ஓங்குநீர் | - | கடல் |
| முப்பகை | - | காமம், வெகுளி, மயக்கம் |
| முனிவர் | - | துறவி |
| வாழ்க்கை | - | தொழிற்பெயர் |
| அம்மா | - | வியப்பிடைச்சொல் |
| நண்ணும் | - | கிட்டிய |
| இசைத்த | - | பொருந்தச் செய்த |
| வண்ணம் | - | ஓசை |
| பிறமொழி | - | வேற்றுமொழி |
| வண்மை | - | வளமை |
| வாடின | - | தளர்ந்த |
| ஓடின | - | மறைந்தன |
| கயன்முள் | - | மீன்முள் |
| திரைகவுள் | - | சுருக்கங்களை உடைய கன்னம் |
| கணிச்சி | - | மழுவாயுதம் |
| திறல் | - | வலிமை |
| ஒருவன் | - | எமன் |
| ஆறு | - | நெறி |
| பசை | - | ஓட்டும் பசை(ஈரம்) |
| பச்சை | - | தோல் |
| மாச்சிறைப் பறவை | - | கரிய சிறகுகள் உடைய வௌவால் |
| முதுமரம் | - | பழையமரம் |
| முகை | - | மொட்டு |
| கடிமகள் | - | மணமகள் |
| கதப்பு | - | கூந்தல் |
| தண்பதம் | - | குளிர்பதம் |
| இறவு | - | இறாமீன் |
| முதல் | - | அடி |
| பிணர் | - | சருச்சரை(சொர சொரப்பு) |
| தடவு | - | பெருமை |
| சுறவு | - | சுறாமீன் |
| கொடு | - | கொம்பு |
| மருப்பு | - | தந்தம் |
| உழை | - | பெண்மான் |
| உரவு | - | வலிமை |
| ஒழுகுநீர் | - | ஓடுகின்ற நீர் |
| ஆரல் | - | ஆரல் மீன் |
| குருகு | - | நாரை |
| மறு | - | குற்றம் |
| தூவி | - | இறகு |
| மரபு | - | முறைமை |
| ஓதி | - | கூந்தல் |
| கிளை | - | சுற்றம் |
| ஊன் | - | தசை |
| நிணம் | - | கொழுப்பு |
| வல்சி | - | உணவு |
| போலாம் | - | பொன் |
| விறல் | - | வலிமை |
| வையகம் | - | உலகம் |
| தினை | - | மிகச் சிறிய அளவு |
| சால்பு | - | நிறைபண்பு |
| மாசு | - | குற்றம் |
| அகழ்வாரை | - | தோண்டுபவரை |
| பொறுத்தல் | - | மன்னிக்க |
| ஓரால் | - | நீக்குதல் |
| மடவார் | - | அறிவிலிகள் |
| விருந்து | - | புதியராய் வந்தவர் |
| பொன்றும் | - | அழியும் |
| அரண் | - | கோட்டை |
| ஒட்பம் | - | அறிவுடைமை |
| அதிர | - | நடுங்கும் படி |
| திட்பம் | - | வலிமை |
| ஒரால் | - | செய்யாமை |
பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]