Click to view: TNPSC Group IV Results 2012 - Now, you can take Online model Exam FREE!

சொற்பொருள்

என்பால் - என்னிடம்
தார்வேந்தன் - மாலையணிந்த அரசன்
கோல்நோக்கி - செங்கோல் செய்யும் அரசனை நோக்கி
செத்தை - குப்பைகூளம்
இளைப்பாறுதல் - ஓய்வெடுத்தல்
ஆரமிர்தே - அரிய அமிழ்தே
பூரணமாய் - முழுமையாய்
புனிதம் - தூய்மை
விழுப்பொருள் - மேலானப்பொருள்
வையம் - உலகம்
இரிந்திட - விலகிட
பைய - மெல்ல
தாள் - திருவடி
ஐயை - தாய்
மருவு - பொருந்திய
செய் - வயல்
மல்குதல் - நிறைதல்
இருநிலம் - பெரிய பூவுலகு
ஓங்குமலை - உயர்ந்த மலை
சிலம்பு - மலைச்சாரல்
வேங்கை பிடவு - மலைநிலத்தே வளரும் மரங்கள்
உகிர் - நகம்
உழுவை - ஆண்புலி
கவலை - கிளைவழி
சாஅய் - மெலிவுற்று
தோகை - மயில்
வதுவை - திருமணம்
அமரருள் - தேவர் உலகம்
ஆரிருள் - நரகம்
செறிவு - அடக்கம்
தோற்றம் - உயர்வு
பணிதல் - அடங்குதல்
எழுமை - ஏழு பிறப்பு
சோகாப்பர் - துன்புறுவர்
கதம் - சினம்
தாளாற்றி - மிக்க முயற்சி செய்து
வேளாண்மை - உதவி
இடம் - செல்வம்
திரு - செல்வம்
கடன் - முறைமை
கூகை - கோட்டான்
தகர் - ஆட்டுக்கிடாய்
செறுநர் - பகைவர்
மாற்றான் - பகைவர்
சாகாடு - வண்டி
உய்க்கும் - செலுத்தும்
காக்க - கடைப்பிடித்து ஒழுகுக
சீர்மை - விழுப்பம், சிறப்பு
மாண - மிகவும்
ஒருமை - ஒருபிறப்பு
ஏமாப்பு - பாதுகாப்பு
வடு - தழும்பு
செவ்வி - தகுந்த காலம்
தந்த - ஈட்டிய
புத்தேள் உலகம் - தேவர் உலகம்
அற்று - போலும்
ஒல்கார் - தளரார்
கேடு - பொருள்கேடு
இகல் - பகை
பொள்ளென - உடனடியாக
சுமக்க - பனிக
பீலி - மயில்தோகை
இரும் - முரியும்
சிலை - வில்
குரங்கின - வளைந்தன
கருங்கொடி - கரிய ஒழுங்கு
கொடி - ஒழுங்கு
எயிரு - பல்
எரிமலர் - முருக்கமலர்
இவுளி - குதிரை
நுனை - கூர்மை
பிணை - பெண்மான்
இழுக்கி - தப்பி
மொய்ம்பு - வலிமை
கணிகை - பொதுமகள்
குரங்கி - வளைந்து
நிலமடந்தை - பெற்ற தாய்
கைத்தாய் - செவிலித்தாய்
புரி - முறுக்கு
பொழில் - சோலை
பறவை - கின்னரமிதுனம் என்னும் பறவை
மிடறு - கழுத்து
கடி - விளக்கம்
விம்மாது - புடைக்காது
உளர - தடவ
கால் - காற்று
கடம் - காடு
மாழ்கி - மயங்கி
எழினி - உறை
மடங்கள் - சிங்கம்
கொல்லை - முல்லைநிலம்
தூமம் - அகிற்புகை
இருவிசும்பு - செவிலித்தாய்
ஓதி - சொல்லி
பத்தர் - யாழின் ஓர் உறுப்பு
கான் - காடு
சிரம் - தலை
வளை - புற்று
பிடவை - துணி
பொறி - புள்ளிகள்
பருவரல் - துன்பம்
கடி - மணம்
நறை - தேன்
கெந்தம் - பற்கள்
சென்னி - தலை
கோடிகம் - ஆடை
கான்று - உமிழ்ந்து
வரை - மலை
முரணி - மாறுபட்டு
நகம் - மலை
முழை - குகை
பாந்தள் - பாம்பு
வெருவி - அஞ்சி
உரகம், பணி - பாம்பு
நித்திரை - தூக்கம்
காந்தி - பேரொளி
பரல் - கல்
வேகம் - சினம்
மரைமலர் - தாமரை மலர்
கால் - காற்று
பன்னகம் - பாம்பு
புடை - வளை, பொந்து
புதியன் - இறைவன்
செந்தழல் - வேள்வியில் மூடுகிற நெருப்பு
வானோர் - தேவர்கள்
இந்தனம் - விறகு
உகம் - யுகம்
திருந்தலீர் - பகைவர்கள்
செயமாது - வெற்றித் திருமகள்(விசயலட்சுமி)
காயம் - உடம்பு
வாரி - கடல்
கோற்றொடியார் - பெண்கள்(உலக்கையைத் தொடியணிந்த கையில் கொண்ட பெண்கள்)

பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]


Donate