Click to view: TNPSC Group IV Results 2012 - Now, you can take Online model Exam FREE!

சொற்பொருள்

குக்குவென - நெல்லடிக்கும் பொது பெண்கள் ஏற்படுத்தும் ஒலிக்குறிப்பு
பண்ணை - வயல்வெளி
வேய் - மூங்கில்
அரி - சிங்கம்
அவுணன் - இரணியன்
சேனை - சைனியம்
படி - உலகம்
பெண் - அகலிகை
நாரி - சீதாப்பிராட்டி
அரண் - சிவன்
காயம் - உடம்பு
பண்ணும் தொழில் - காத்தல் தொழில்
பாதவம் - மருத மரம்
பாரம் - பளு
வேலை - கடல்
வரை - மலை
மாசை - பழிப்பை
அரை - இடுப்பு
அமணர் - சமணர்
சிலை - வில்
மடி - இறந்த
கடகரி - மத யானை
அபயன் - முதல் குலோத்துங்கச்சோழன்
சேர - முற்றும்
ஆற்றி - உண்டாக்கி
கலிங்கம் - ஆடை
முந்நூல் - பூணூல்
அரிதனை - பகை
சயத்தம்பம் - வெற்றித்தூண்
வயமா - குதிரை
வண்டையார் கோன் - கருணாகரத் தொண்டைமான்
புலராமே - வறண்டு விடாமல்
விரல் - பெருவிரல்
அஞ்சனம் - கண்மை
தாள் - கால்
கம்முதல் - குரல் தேய்ந்து மங்குதல்
சிவவாமே - சிவக்காமல்
கலுழ்தல் - அழுதல்
வயித்தியநாதபுரி - புள்ளிருக்குவேளூர்
ஏகன் - இறைவன்
தற்பரன் - இறைவன்
அருந்தவம் - பண்புத்தொகை
உன்னதம் - வீரம்
இமமலை - இமயமலை
கீர்த்தி - புகழ்
பண் - பாடல்
ஈர்க்கின்ற - கவர்கின்ற
புலம் - அறிவு
புல்லடிமை - இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம்
தட்டின்றி - குறையின்றி
மூவாத - மூப்படையாத
மீன் - விண்மீன்
தளை - விலங்கு
வதிபவர் - வாழ்பவர்
மிடிமை - வறுமை
நமன் - எமன்
நடலை - இறப்பு
பிணி - நோய்
ஏமாப்பு - பாதுகாப்பு
ஆழி - கடல், சக்கரம்
சார்ங்கம் - வில்
பாழி - வலிமை
துசங்கட்டுதல் - விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.
இருவினை - நல்வினை, தீவினை
பரவுதும் - யாம் தொழுதும்
ஓங்குநீர் - கடல்
முப்பகை - காமம், வெகுளி, மயக்கம்
முனிவர் - துறவி
வாழ்க்கை - தொழிற்பெயர்
அம்மா - வியப்பிடைச்சொல்
நண்ணும் - கிட்டிய
இசைத்த - பொருந்தச் செய்த
வண்ணம் - ஓசை
பிறமொழி - வேற்றுமொழி
வண்மை - வளமை
வாடின - தளர்ந்த
ஓடின - மறைந்தன
கயன்முள் - மீன்முள்
திரைகவுள் - சுருக்கங்களை உடைய கன்னம்
கணிச்சி - மழுவாயுதம்
திறல் - வலிமை
ஒருவன் - எமன்
ஆறு - நெறி
பசை - ஓட்டும் பசை(ஈரம்)
பச்சை - தோல்
மாச்சிறைப் பறவை - கரிய சிறகுகள் உடைய வௌவால்
முதுமரம் - பழையமரம்
முகை - மொட்டு
கடிமகள் - மணமகள்
கதப்பு - கூந்தல்
தண்பதம் - குளிர்பதம்
இறவு - இறாமீன்
முதல் - அடி
பிணர் - சருச்சரை(சொர சொரப்பு)
தடவு - பெருமை
சுறவு - சுறாமீன்
கொடு - கொம்பு
மருப்பு - தந்தம்
உழை - பெண்மான்
உரவு - வலிமை
ஒழுகுநீர் - ஓடுகின்ற நீர்
ஆரல் - ஆரல் மீன்
குருகு - நாரை
மறு - குற்றம்
தூவி - இறகு
மரபு - முறைமை
ஓதி - கூந்தல்
கிளை - சுற்றம்
ஊன் - தசை
நிணம் - கொழுப்பு
வல்சி - உணவு
போலாம் - பொன்
விறல் - வலிமை
வையகம் - உலகம்
தினை - மிகச் சிறிய அளவு
சால்பு - நிறைபண்பு
மாசு - குற்றம்
அகழ்வாரை - தோண்டுபவரை
பொறுத்தல் - மன்னிக்க
ஓரால் - நீக்குதல்
மடவார் - அறிவிலிகள்
விருந்து - புதியராய் வந்தவர்
பொன்றும் - அழியும்
அரண் - கோட்டை
ஒட்பம் - அறிவுடைமை
அதிர - நடுங்கும் படி
திட்பம் - வலிமை
ஒரால் - செய்யாமை

பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]


Donate